மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா?
நரேந்திர மோடி மீது தற்சமயம் பல கேள்விகள் எழுந்து வந்தாலும் அதற்கு செவி கொடுக்காமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் உள்ளார். அந்த வகையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1093 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது. மனிதருக்கான உரிமைகள் எந்த செயல்களையும் மீறப்பட்டால் குற்றமாக எடுத்துக்கொள்ளப்படும். குற்றத்தினை இந்த ஆணையம் விசாரணை நடத்தும். தேசிய மனித உரிமை ஆணையமானது நிறுவி இந்த ஆண்டுடன் இருபத்தி எட்டு வருடங்கள் ஆகிறது.
அதனையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த காணொலி காட்சியில் பிரதமர் மோடி கூறியதாவது, உலக அளவில் மனித உரிமைகள் பாதுகாப்பின் மூலம் தேசத்தந்தை மகாத்மா காந்தி காணப்படுகிறார் என்று தெரிவித்தார். முதல் உலகப்போரின் போது பெரும்பாலான நாடுகளில் மனித உரிமைகளை மீறினார்.
அந்நிலையில் இந்தியா மனித உரிமைகள் பாதுகாப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டதாக இருந்தது என தெரிவித்தார். எந்த சூழ்நிலைகளிலும் அமைதியான வழியில் பணிந்து உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்கியது என்று தெரிவித்தார். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மருத்துவம் ,காவல்துறை , மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் போன்றவற்றை வழங்குவதற்காக ஸ்டாப் சென்டஸ் (one stop center) அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நமது அரசியலமைப்பு சட்டம் சமத்துவம் வாய்ந்த மனித சமுதாயத்திற்கு வழிவகை செய்து இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு கூறியுள்ளார்.