மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ E40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 MAH பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x சிறந்த குறைந்த ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது.
புதிய மோட்டோ E40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் மலிவானதாக அமைந்துள்ளது.