சமூக வலைத்தளங்கள் புகழ் ரோகினி ஐஏஎஸ்! மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு! காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் இன்று IAS IPS அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் உள்ளனர், அதில் குறிப்பாக
தமிழ்நாடு இசை, கவின் கலை கல்லூரி பதிவாளராக உள்ள ரோஹிணி ஐ.ஏ.எஸ்., அவர்களை மத்திய அரசு பணிக்கு மாற்றியது தமிழக அரசு.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையான உயர்கல்வித்துறைக்கு துணை செயலாளராக அவரை பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இவர் சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த பொது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரோகினி, அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர், தான் எங்கே சென்றாலும் எந்த மக்களுக்கு பொது சேவை செய்தாலும் திட்டங்களை செயல்படுத்தினாலும் அதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்,.
தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட ஆட்சியர்களில் மிக குறுகிய காலத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ரோகிணி ஐஏஎஸ் அவர்கள் பிரபலமாக இருந்த காலகட்டம் எல்லாம் உண்டு,. மற்ற மாவட்ட ஆட்சியர்கள் ரோகினி ஐஏஎஸ் மேல் பொறாமைப்படும் அளவிற்கு தனது செயலை மக்களிடம் சமூக வலைத்தளங்களின் விளம்பரம் மூலம் பிரபலமானார்,.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக அவர் நடந்து கொள்ளாத காரணத்தினாலும், தேர்தல் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டம் என்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சரை நேரடியாகவே தொடர்புகொண்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தனர்,.
இதற்கும் மேலே முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் பதவி ஏற்காத சமயத்தில் அழைப்பு விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்,. இந்த செயல் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோபப் பார்வைக்கு உள்ளானார். அடுத்த சில தினங்களில் அவர் முகவரியே இல்லாத இடத்திற்கு தமிழக அரசு தூக்கி அடித்தது,. தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக்கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டார்,.
ரோகிணி அவர் சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுபடும் போது விவசாயிகள் மத்தியில் கண்ணீர் மல்க விடை பெற்றார்,. தற்போது அவரை தமிழ்நாடு அரசு சார்ந்த பணியில் இருந்து வெளியேற்றி மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைத்துள்ளது,. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்ந்த உயர்கல்வித்துறைக்கு துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.