நேற்று காலையில் திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தனர். கைதிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வியிட்டனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது,
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த வருடத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பற்றி இரண்டு வாரத்தில் முடிவு செய்யப்படும்.
இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. பயிற்சி மையம் உள்ளது. அது தமிழகத்தில் திருச்சி சிறைச்சாலையில் உள்ளது.
சிறைச்சாலையில் செல்போன் உபயோகத்தை தவிர்க்க ஜாமர் அதிகமாக பொருத்தப்படும் எனக் கூறினார்.
மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பதில் திமுக உறுதியாக உள்ளது எனக்கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்திருந்த போது தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டார்.
இதில் தொடர்புடையோர்கள் என கூறி நளினி, பேரறிவாளன், முருகன் என 7 பேர் செய்யப்பட்டனர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறையில் உள்ளனர்.
இவர்களது விடுதலை இன்று வரை கேள்வி குறியாகவே உள்ளது.