நான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே!
கிணத்துக்கடவு பகுதியில் கோவை முதல் பொள்ளாச்சி ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் ராமச்சந்திரன். இவரது கடையில் மளிகை கடையில் எப்போதும் காய்கறி மற்றும் பழங்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பகுதியில் தினசரி காய்கறி சந்தையில் இருந்து செவ்வாழை தார் ஒன்று அவரது கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த தாரை வாங்கிய அவர் அதை விற்பனைக்காக வைத்து இருந்தார். அப்போது அந்த செவ்வாழை தார் பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு உள்ளிட்ட நான்கு நிறங்களில் இருந்தது. இதனை கடை உரிமையாளர் விற்பனைக்காக கடைக்கு வெளியே தொங்கவிட்டு இருந்தார்.
ஆனால் செவ்வாழை தாரில், அதுவும் ஒரே தாரில் நான்கு நிறங்கள் இருந்ததை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வாழைத்தாரை அங்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்து சென்றனர்.