திமுக ஆட்சிக்கு வந்ததும் கைதாகும் முதல் மூன்று நபர்கள்: முக ஸ்டாலின்
திமுக ஆட்சி வந்ததும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்த்து கைதாக போகிற முதல் இரண்டு பேர் தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும்தான் என இன்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை அனைவரும் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை. திமுகவை விமர்சிப்பவர்கள் மத்திய அரசை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கோமா நிலையில் கிடக்கிறது.
தியாகம், சிறை, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்; ஸ்டாலினை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை, சிறைக்கு பயந்தவன் நான் இல்லை. ஒன்றல்ல பல முறை சிறைக்கு சென்றவன் நான்; சிறை சென்றது கொலை செய்துவிட்டோ, கொள்ளையடித்து விட்டோ அல்ல, மக்கள் பிரச்னைகளுக்காக பல முறை சிறை சென்றவன் நான்.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியாது, கோவையில் கொடிகம்பத்தால் அனுராதா கால் பறிபோனது தெரியாது, ஆனால் ஊழல் செய்வது மட்டும் நன்றாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்… கடப்பாறையை முழுங்கிவிட்டு கம்முன்னு இருப்பவர்தான் அவர்’ இவ்வாறு முக ஸ்டாலின் ஆவேசமாக தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்