கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்!
கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த கோர விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் மகள்கள் அக்க்ஷரா, அகான்ஷா, மற்றும் உறவினர் ரம்யா ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி அடுத்த பி. ஆர். ஜி மாதேப்பள்ளி அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது. எதிரே பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு காருடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிறுமி அக்க்ஷரா மற்றும் அவரது உறவினர் ரம்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் அனில் குமார், அபர்ணா, அகான்ஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்த நிலையில் இருந்தனர். மற்றொரு காரில் வந்த பெங்களூருவை சேர்ந்த இருவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.