ரூபாய் 25,000 வேண்டுமா? பள்ளி கல்வி துறையின் அதிரடி அறிவிப்பு!

0
181
Image purpose only
Udhayanidhi Stalin, Anbil Mahesh Poiyyamozhi

தமிழக பள்ளி கல்வி துறை நேற்று ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடி வரும் கல்வி திட்டமாக அமைந்துள்ளது.

பள்ளி நேரத்திற்கு பிறகு, வீட்டின் அருகிலேயே சிறு சிறு குழுக்களாக பிரிந்து மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தன்னார்வலர்கள் illamthedi kalvi .tnschools .gov .in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் திட்டத்தையும், கொள்கையையும் கிராம மற்றும் நகர்ப்புற மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்காக இணையதளமும் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் லோகோ உருவாக்க திட்டமிடபட்டுள்ளது. இந்த லோகோ உருவாக்கத்திற்கு மக்களிடையே போட்டி நடைபெற உள்ளது.

இதற்கு வயது வரம்பு இல்லை. எல்லா தரப்பட்ட மக்களும் கலந்து கொள்ளலாம். போட்டியாளர்கள் தங்களது இறுதி லோகோ டிசைனை (email protected ) மின்னஞ்சல் மூலமாக அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இறுதி முடிவு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையால் எடுக்கப்படும். இதில் சிறந்த லோகோ டிசைனிற்கு ரூபாய் 25,000 பரிசு தொகையாக வழங்கப்படும்.

 

 

 

 

 

 

Previous articleரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!
Next articleஜனவரியில் கொரோனா மூன்றாவது அலை: தமிழக சுகாதார துறை