பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

Photo of author

By Hasini

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

நம்மால் மறக்க முடியாத ஒரு வழக்கு என்றால் அது பொள்ளாச்சியின் பாலியல் வழக்கு ஆகும். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த வழக்கு நடைபெற்ற போது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அவ்வளவு வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியானது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில், அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததால், ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் அதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக இன்று கோவை மகளிர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மீண்டும் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள், அவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவியது.

இந்த நிலையில், சேலம் மாநகர போலீஸ் சூப்பிரடண்ட் நஜ்மல் ஹோடா, சேலம் ஆயுதப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார் ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி  உத்தரவிட்டுள்ளார்.