திமுக வின் வாரிசு அரசியலுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதிமுக.
கலைஞர் தனது மகனை தலைவர் ஆக்குவதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் வெளியே வந்து கட்சி தொடங்கியவர் தான் வைகோ. இவரது பின்னால் வாரிசு அரசியலை எதிர்த்து பல பெரிய தலைவர்கள் திமுக விட்டு நீங்கி மதிமுக வில் இணைந்தனர்.
வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து அப்போது இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி என பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர்.
வாரிசு அரசியலை எதிர்த்து வெளியே வந்த வைகோ இப்போது கூட்டணி வைத்திருப்பதே திமுகவில் தான்.
தற்போது வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியில் பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதிமுகவில் இருக்கும் பல மூத்த தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுகவில் இருந்தனர். வைகோவை நம்பி வாரிசு அரசியலை எதிர்த்து வெளியே வந்தவர்கள்.
ஆனால் எந்த காரணத்திற்காக அங்கிருந்து வந்தார்களோ அது தான் தற்போது இந்த கட்சியிலும் நடைபெற்று இருக்கிறது.
இந்த கட்சி பிரிந்தால் திருப்பூர் துரைசாமி தலைமையில் புதிய அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு அரசியலால் உதயமான கட்சி இன்று வாரிசு அரசியலால் பிரியும் நிலையில் உள்ளது.