மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

0
180

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

மேலும், நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்திலும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.இங்கு சுற்றிப்பார்க்க வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் அமரவோ அல்லது விளையாடவோ முடியாத நிலையில் மைதானம் சேரும் சகதியுமாகவும் காணப்படுகின்றன.

தற்போது புல் மைதானத்தை பராமரிக்கும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரணி இல்லம் புல் மைதானமும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் புல் மைதானம் சேறும் சகதியுமாக மாற வாய்ப்புள்ளது.

பராமரிப்பு பணிக்களுக்காக தற்போது இரண்டு புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால், இவ்விரு புல் மைதானத்திற்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleசூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!!
Next articleஅண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!