வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

0
155

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும் பெறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்றும், எனவே இந்த இரு தரப்பினருக்கும் சீட் கேட்க வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டபோது கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் தற்போதைய காலம், கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வயதானவர்களுக்கும் பண வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே சீர் கொடுத்து திமுக அழிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பணவசதி இல்லை என்றால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியிருப்பது அக்கட்சியினர் களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்பை சரியாக நிர்வகிக்க படிப்பு, புத்திசாலித்தனம் முக்கியம் என்ற நிலையில் பணம் இல்லாதவர்கள் சீட் கேட்க வேண்டாம் என்று ஒரு அமைச்சரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous articleஎது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்
Next articleரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!