நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவின் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக இருக்கிறார் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
அதோடு பாஜகவிற்கு எதிராக யாரேனும் கருத்துத் தெரிவித்தால் உடனடியாக மறுத்து பதிலளிப்பது இவருடைய ஸ்டைல்.
அதோடு யார் என்ன தவறு செய்தாலும் உடனடியாக அவர்கள் தவறை சுட்டிக்காட்டும் தைரியமிக்க ஒரு பெண்மணியாக பாஜகவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.
அதோடு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிராகவும், குஷ்புவிற்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் குஷ்பூ பாஜகவில் தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இவர் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் உடன் வருகை தந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அதாவது திமுகவின் பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றை ஆபாசமாக சித்தரித்து செய்து பதிவிட்டு இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கின்றார். அவர் பாஜக தலைவர் தொடர்பாகவும், ஆபாசமாக பேசி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நானும் பாஜகவை சார்ந்த சில பெண் நிர்வாகிகளும் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த சமயத்தில் வண்டி சாய்ந்து விட்டது, அந்த சமயத்தில் சில பெண் நிர்வாகிகள் கீழே விழுந்து விட்டார்கள், அவர்களுடைய கால்களுக்கு இடையில் சிக்கிய என்னுடைய புடவையும் சற்று விலகி விட்டது, அதனை யாரோ ஒரு சிலர் வீடியோவாக எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்திருக்கிறேன் தெரிவித்திருக்கிறார்.
பாஜகவில் நான் நன்மதிப்பு கொண்டிருக்கக்கூடிய தலைவர்களுடன் குறிப்பிட்ட ஆபாச வீடியோவையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்கள். பெண்கள் தொடர்பாக அனைத்து பிரச்சினைகளுக்கும் கருத்து தெரிவிக்கும் கனிமொழி இந்த பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்காதது ஏன் அவர் இப்படி மௌனம் காப்பது வருத்தமளிக்கிறது என தெரிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.