நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார்.
பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார்.
அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார்.
பின்னர் தினகரனிடமிருந்து விலகினார். பின்னர் இனி இலக்கியக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
சட்டபை தேர்தலின் போது திமுக மற்றும் ஸ்டாலினை ஆதரித்து பேசினார் சம்பத். ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.
மதிமுகவில் வைகோ வின் மகன் துரைக்கு பதவி கொடுத்த பிரச்சனை மிகப்பெரிய போர்க்களமாக வெடித்து வருகிறது.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
துரை வைகோ வை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டது போல் மக்களும் ஏற்று கொள்வர் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதிமுக ஆதரவாளர்கள் பலரும் நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவில் இணைய வேண்டும் எனவும், அவர் துரை வைகோவுக்கு உறுதுணையாக இருப்பார் எனவும் கூறி வருகின்றனர்.