இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு!
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் எழுந்து வந்ததில் மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் அவர்கள் கூறியது, ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை கண்டறியும் ஆணையமாக செயல்படவில்லை என்று கூறினர்.
மேலும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றனர். பல்வேறு தலைவர்களை அழைத்து விசாரிக் வேண்டிய இடத்தில் மருத்துவர்களையே அழைத்து விசாரித்து வருகின்றனர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். அதுமட்டுமின்றி ஆறுமுகசாமி ஆணையத்தில் நாங்கள் மருத்துவ ரீதியாக கூறுவதை கேட்கும் மருத்துவ வல்லுனர்கள் யாருமில்லை அப்படியிருக்கையில் நாங்கள் கூறும் விவரங்கள் அவர்களுக்கு எந்த விதத்தில் புரியும் என்பதை ஒன்றையும் முன்வைத்தனர்.இன்று அந்த வழக்கு மீண்டும் வாதத்திற்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு கூறியதாவது, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரிக்கும் ஆணையம் அல்ல என்று தனது முதல் வாதத்தை எடுத்து வைத்தனர். இது உண்மையை கண்டறியும் ஆணையம் என்று கூறினர்.
உண்மைகளை கண்டறிந்து வழங்குவதுதான் இந்த ஆணையத்தின் வேலை என்று தெரிவித்தனர். அதேபோல தற்பொழுது வரை 50 அப்போலோ மருத்துவர்களை விசாரித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது. அதேபோல மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி வைத்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு கூறியது, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவ ஆலோசனை தர நீதிமன்றம் விரும்பினால் அதை ஏற்க தயார். ஆனால் அந்த ஆலோசனை வழங்கும் மருத்துவர்களை நாங்களேதான் தேர்ந்தெடுப்போம் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஆலோசனை மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பதில் அப்போலோ எந்த தடையும் கூறக் கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.