தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது அந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆனால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இந்த நிலையில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
ஆனாலும் கடன் எப்படியும் தள்ளுபடி ஆகிவிடும் என்ற எண்ணத்தில் பலர் கோடிக்கணக்கான முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, அந்த வகையில் 5 சவரன் வரை நகை கடன் வாங்கியவர்கள் தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில சார்பாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது இதனை ஆராய்வதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நகை கடன் தள்ளுபடி அரசாணை எப்போது வெளிவரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தார்கள் இந்த சூழ்நிலையில், மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, கூட்டுறவு சங்கங்களின் வங்கிகளில் 40 கிராமுக்கு குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தள்ளுபடி தொடர்பான அரசாணை தயாராக இருக்கிறது. இந்த வாரம் வெளிவந்து விடும் அதனை அடுத்து நகை உரிமையாளர்களிடம் அதைக் கொடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருக்கிறார் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தகவலின் மூலமாக தீபாவளிப் பரிசாக தங்களுடைய நகைகளை திரும்ப வாங்கி விடலாம் என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் இருக்கிறார்கள் அதேநேரம் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த மாநில அரசு அனைத்து நியாயவிலை கடை அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.