டாஸ்மாக் நிறுவனத்தில் நஷ்டமா? குடிமகன்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

தமிழக அரசுக்கு அதிக வருவாய் கொடுப்பது டாஸ்மாக் நிறுவனம்தான் சொல்லப்போனால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருவது இந்த டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அந்த அளவிற்கு தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் கூட்டம் இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் டாஸ்மாக்கில் மட்டும் எப்போதும் கூட்டம் அலை மோதுவது வழக்கம், இப்படி எப்போதும் கூட்டமாகவும், தமிழக அரசுக்கு அதிக லாபம் கொடுக்கும் ஒரு நிறுவனமாகவும், இருந்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆனால் அதுதான் உண்மை கடந்த ஆறு வருடங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் 312.43 கோடி என்ற அதிர்ச்சித் தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையில் டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்த
நஷ்ட தொகை தொடர்பான வருடம் ரீதியான தகவலை கேட்டிருக்கிறார்.

இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்த நஷ்டம் 312 43 கோடி என்று வெளியான அதிர்ச்சித் தகவல் காரணமாக, குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்த தகவலை கேட்ட பழனியை சேர்ந்த திருஞானம் அவர்களுக்கு தமிழக வாணிபகழகம் வருட ரீதியான நஷ்டத்தை குறிப்பிட்டு தகவல் அனுப்பி இருக்கின்றது. அதன் அடிப்படையில் ஆறு வருடங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் 312 புள்ளி 43 கோரி என்றும், அதோடு 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் மட்டும் 67.61 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் கிடைத்திருக்கிறது.