இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுதினமும், நடைபெற இருக்கிறது இத்தாலிய பிரதமர் மரியோ திரகி அழைத்ததன் பேரில் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார்.
இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் குறித்த உலக தலைவர்கள் மாநாடு வருகின்ற ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைத்ததன் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலமாக இட்டாலி நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அந்த நாட்டின் தலைநகர் ரோம் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகியையும்பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த பயணத்தின்போது இஸ்ரேல் ஜப்பான் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற இருக்கக்கூடிய அந்த நாடுகளின் பிரதமர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க இருக்கிறார் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சி மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு மெல்ல, மெல்ல உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் தற்சமயம் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு மற்றும் ஜி-20 உச்சிமாநாடு உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க இருப்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது