பட்டாசு வெடிக்கும் போது , சானிடைசர் பயன்படுத்தினால் ஆபத்தா?

Photo of author

By Parthipan K

தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் நியாபகம் வருவது பட்டாசு தான்.

பட்டாசும், புத்தாடையும் சேர்ந்தது தான் தீபாவளி.பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே மன நிறைவான தீபாவளி.

பகலில் வெடிப்பதற்கு அதிக சத்தங்களை கொண்ட சரவெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கட் வெடி என பல வகையான வெடிகளும், இரவில் வெடிப்பதற்கு ஒளிமயமான கம்பி மத்தாப்பூ, குழல் வானம், சங்கு சக்கரம் போன்ற பல வகையான வெடிகளும் உண்டு.

பட்டாசு என்னும் போது பல கோலாகலங்கள் இருந்தாலும், அதனுடன் சேர்ந்து பல ஆபத்துக்களும் உண்டு. தீபாவளியின் போது பல வெடி விபத்துக்களும் நடப்பதுண்டு.

அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் பொது சுகாதார துறை பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

பட்டாசை கொளுத்தி விட்டு கண்ட இடங்களில் வீசாமல் ஒன்றாக சேர்த்து வைத்து அப்புறப்படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தல் எப்போதும் ஒரு வாளி நீர் அருகில் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை கைகளில் வைத்து வெடிக்க கூடாது, பட்டாசு வெடிக்க வில்லையென்றால் அதை கைகளில் எடுத்து பார்க்காமல் நீர் ஊற்றி உடனே அனைத்து விட வேண்டும்.

சிறுவர்கள் எப்போதும் பெற்றோர்கள் கண் பார்வையிலேயே இருந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரத்தில் கைகளை கழுவாமல் கண், மூக்கு, வாய்களை தொடக்கூடாது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக சானிடைசர் உபயோகிக்கின்றோம், ஆனால் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் சானிடைசர் கொண்டு கைகளை தூய்மைப்படுத்தக் கூடாது, அவ்வாறு உபயோகித்தால் அது மிகப்பெரிய ஆபத்தாக விளையும் எனக் கூறியுள்ளது.