முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

0
124

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் சென்ற சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பழமையான அணை முல்லைப் பெரியாறு அணையால் கேரள மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேரள அரசு தெரிவித்து வருகிறது.

இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையே பேசுபொருளாக இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி கேரளாவைச் சேர்ந்த ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த இந்த வழக்கில் கேரள அரசு சார்பாக 142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை அதிகப்படுத்தினால் முல்லை பெரியாறு அணையால் அதனைத் தாங்கிக்கொள்ள இயலாது. அது பாதுகாப்பானதாக இருப்பதற்கான வாய்ப்பில்லை. அணையில் 139 . 5 அடி மட்டுமே தண்ணீரைத் தேக்க முடியும் அல்லது அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆவது இந்த நிலையில் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 139.5 அடியாக வைத்திருப்பது தொடர்பாக அதற்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்புக் குழு முடிவை எடுக்கும் என்று தெரிவித்து வழக்கை நவம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்த சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தமிழ்நாட்டில் மனுக்களை ஏற்ற பின்னர் நவம்பர் மாதம் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வரை நீர்வளம் ஒப்புதல் அளித்து இருக்கக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணை தெரிகிறது என தெரிவித்திருக்கிறார்.தமிழகம் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலேயே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக வைகை அணைக்கு தொடர்ந்து நீரை திறந்து விட்டுக் கொண்டே இருக்கிறது என கூறியிருக்கிறார் துரைமுருகன்.

அத்தோடு முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை எடுத்த முடிவின் அடிப்படையில் வைகை அணைக்கு குகை பாதை வழியே அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீருடன் கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கிய பின்னர் நேற்று காலை 7 .30 மணி அளவில் முல்லை பெரியாறு அணையின் இரு மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீரை வெளியேற்றி வருகிறது.

மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட மதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றித்தான் இது செய்யப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது மற்றும் ஒப்புதல் வழங்கி இருக்கின்ற நிர்ணயிக்கப்பட்ட மாத வாரியாக அட்டவணை நீர்மட்ட அட்டவணைப்படி தமிழக அரசின் நீர்வளத்துறை அணையினை கவனமாக இயக்கி வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

இதற்கு எதிர்மறையாக வரும் எந்த தகவலும் உண்மையானவை கிடையாது என்பதால் அவை புறக்கணிக்க படவேண்டியவை. எனவே தமிழ் நாட்டிற்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

Previous articleபுதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்!
Next articleதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு!