தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி ஆரம்ப விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இருக்க கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலூரை அடுத்து இருக்கின்ற அப்துல்கலாம் புரத்தில் நாளைக்காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக்கொண்டு இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு மேல் மொணவூரில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக இன்றைய தினம் மாலை 4மணியளவில் சென்னையிலிருந்து காரில் கிளம்பும் அவர், மாலை 7 மணியளவில் வேலூருக்கு வருகை தருகிறார். அப்போது மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவருக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது.
இதில் அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது, இதனை முன்னிட்டு அப்துல்கலாம்புரத்தில் இருக்கக் கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விழாவிற்காக மேடை மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான மேற்கூரை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டிருக்கின்றன. வேலூர் டி ஐ ஜி பாபு தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் செல்வகுமார், தீபா, பாலகிருஷ்ணன், வருண் குமார் உள்ளிட்டோர் மேற்பார்வையில் சுமார் 900 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நலத்திட்ட உதவிகள் பெறுவோருக்கு நோய் தடுப்புசி ஏற்கனவே செலுத்தப்பட்டு இருப்பதால் பிரச்சனை எதுவும் இல்லை, ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றால் மட்டுமே முதல் அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதல்வரான பின்னால் முதன்முறையாக வேலூர் மாவட்டத்திற்கு வருகை தருவதால் அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.