இந்தியாவில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அப்படி வதந்திகளை பரப்பி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டுவியா தெரிவித்திருக்கிறார்.
நடப்பு மாதத்திற்கான உரங்கள் உற்பத்தி செய்வதற்கான விலக்கு தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் உரத்தட்டுப்பாடு இருப்பதாக பரப்பப்படும் தகவல் அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பானவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளது யூரியா உரத்தின் தேவை நாற்பத்தி ஒரு லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சூழ்நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். அதேபோல டிஏபி உரம் 17 லட்சம் மெட்ரிக் டன் தேவையாக இருக்கின்ற சூழ்நிலையில் 18 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் என் பி கே உரங்கள் 15 மெட்ரிக் டன் அளவு தேவை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 30 மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார் விவசாயிகள் யாரும் உங்களை மதிக்க வைக்க வேண்டும் எனவும் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர்கள் தெரிவிக்கும் தகவலுக்கு யாரும் முக்கியத்துவம் வழங்க வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த வதந்திகளை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் உர விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார் நாட்டில் உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோக திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது விவசாயிகளுக்கு தேவைப்படும் அளவு உரம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் தற்சமயம் மழைக்காலம் என்பதால் விவசாயிகள் நெல் தென்னை வாழை நிலக்கடலை பருத்தி மஞ்சள் சோளம் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்வதன் காரணமாக யூரியா உரத்தின் தேவை அதிகமாக இருக்கிறது மத்திய அரசு 90 ஆயிரம் டன் யூரியா உரத்தை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் உரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என தெரிவித்து இருக்கின்றார்கள் விவசாயிகள் ஒருபுறம் மத்திய அமைச்சர் உரத் தட்டுப்பாடு இல்லை என்கிறார், இன்னொரு புறம் உரத்திற்காக விவசாயிகள் கடை கடையாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன.