என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! இலங்கை தமிழர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
158

வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது அந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுகதான் கடந்த பத்து வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அதிமுக அரசு எந்தவிதமான கவலையும் வெளிப்படுத்தாமல் இருந்தது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு உள்ளது அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறோம் என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை இலங்கை தமிழர்களுக்காக செய்திருக்கின்றோம் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகாம்களில் இருக்கக்கூடிய இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இலங்கை தமிழர் முகாம்களில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு  கோ.ஆப்.டெக்ஸ் மூலமாக தரமான ஆடைகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கைத் தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, முகாம் வாழ் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து வழங்கப்படும் இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் கிடையாது என்னை உங்களின் உடன்பிறப்புகள் ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

தற்போது இப்படி வீர வசனம் பேசும் இதே திமுக ஆட்சிக் காலத்தில்தான் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது வாய் மூடி இருந்துவிட்டு தற்சமயம் வாய்ச்சொல் வீரராக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத்தமிழர்களின் இறுதிக்கட்ட போரின்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி, அதேபோல தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, அப்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இங்கே வாரம் ஒரு முறை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்குச் சென்று வந்தார்.

அவருடைய அந்த டெல்லி பயணம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடைபெறவில்லை. மாறாக தன்னுடைய கட்சியை சார்ந்தவர்களுக்கும், தன்னுடைய குடும்பங்களை சார்ந்த உறவினர்களுக்கும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வாரம் ஒருமுறை அவர் டெல்லிக்குச் சென்று வந்தார் என்பது அனைவரும் அறிந்த கதைதான்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு அந்த துயர சம்பவம் நடைபெற்ற சமயத்தில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அப்போது அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு தற்சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே கட்சி திமுக என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள். அதோடு கடந்த 2009ஆம் ஆண்டு அந்த துயர சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருந்தவர் இதே ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!
Next articleBREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!