கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா?
திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதுமட்டுமின்றி சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களையும் வெளி கொண்டு வந்து மக்கள் மத்தியில் காட்டுகிறது.அந்தவகையில் தற்பொழுது பயிர்கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக தலைவர் மீது புகார் எழுந்தாது.அதனை தொடர்ந்து விசாரித்ததில் அவர் பயிர் கடன் வழங்குவதில் மோசடி செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.இந்த வங்கிகளில் வருடம் தோறும் ஓர் குறிப்பிட்ட தொகை ஒன்று பயிர்கடன் வழங்குவதற்கு என்று ஒதுக்கப்படும்.அவ்வாறு விவசாயிகள் அதிகப்படியானோர் தற்போது பயிர் கடன் பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அதன் வட்டியையும் தற்போது அரசாங்கம் குறைத்துள்ளது.அந்தவகையில் 2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தப்பளாம்புலியூர் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக அந்த வங்கி தலைவர் அதிமுக வை சேர்ந்த ரவி என்பவர் மீது புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருந்தது.அந்த புகாரின் பேரில் செயல்முறை ஆய்வுக்குழு தப்பளாம்புலியூர் கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்தியது.அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.அந்த கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவி என்பவர் அவ்வூரை சேர்ந்த 12 பேருக்கு 6,50000 பேருக்கு பயிர் கடன் வழங்கியுள்ளார்.அதில் 5 பேரிடமிருந்து மட்டும் 2,01700 ரூபாய் மட்டுமே திரும்பி செலுத்தியுள்ளனர்.அதேபோல கடந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதாக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த பணம் முழுவதும் கடனாக விவசாயிகளுக்கு வழங்கவில்லை.அதில் 58 லட்சத்து 10 ஆயிரம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள பணத்திற்கு எந்தவித கணக்கும் காணப்படவில்லை.அதனால் கூட்டுறவு தலைவர் ரவி மீது பல வழக்குகள் எழுந்து வந்தது.தற்போது இவர் செய்த குற்றங்கள் அனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதனையடுத்து தற்போது கூட்டுறவு தலைவர் ரவியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது துணைத்தலைவராக இருக்கும் தங்கையன் என்பவரை தலைவராக நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.