முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் இந்தக் கூட்டணி குறித்து கூறிய போது ’அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் கூட்டணி எல்லாம் தூள் தூளாகும் என்றும், ரஜினி கமல் விஜய் அனைவரும் மாயம் பிம்பங்கள் என்றும் தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும் தொழில் பக்தி மிக்கவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
இதேபோல் ரஜினி கமல் கூட்டணி குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியபோது, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை நான் வரும் என்றும், யார் முட்டை என்று நான் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் ஆகியவர்கள் ரஜினி கமல் இணைப்பை கிண்டல் செய்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.