4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது!
கர்நாடக மாநிலத்தில் ராமநகரா என்ற மாவட்டத்தில் பூஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமியை நரபலி கொடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் வைத்து கொண்டிருப்பதை சோதனையின் மூலம் கண்டுபிடித்தனர். மேலும் பூசாரி உடன் இருந்த 12 பேரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் நரபலி கொடுப்பதற்காக அழைத்துவரப்பட்ட 4 வயது சிறுமியையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் பூஜை செய்த இடத்தில் மட்டும், கடந்த இரண்டு வருடங்களாக புதையல் இருப்பதாக கூறி, அதை எடுப்பதற்காக இந்த மாதிரி சில பூஜைகள் நடத்தி வந்ததும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவருமே இன்று காலைதான் இரண்டு கார்களின் மூலம் அங்கு வந்து இறங்கியதை போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபர்களுடன் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அந்த குழந்தை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஒரு சிலர் குழந்தை பிறக்கவில்லை என்று தவமாய் தவமிருந்து குழந்தைகளை பெற்றெடுகின்றனர்.
ஆனால் இந்த மாதிரி சில போலி ஆசாமிகளின் பிடியில் மாட்டிக் கொண்ட குழந்தைகளை யார் காப்பாற்றுவது? அந்த குழந்தையை எங்கிருந்து வந்தது அல்லது கடத்தி வந்தார்களா? என்று கூட தெரியவில்லை. நாம் நமது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.