ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

Photo of author

By Hasini

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 19 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து அந்த ஆட்டத்தை மிகவும் வெற்றிகரமாக ஆடி முடித்தார்.

இதன் காரணமாக நாக்-அவுட் சுற்றில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது. பாகிஸ்தான் இந்த சுற்றில் சிறப்பாக விளையாடியது. தற்போது ஹீரோவாக விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரரான முஹம்மது ரிஸ்வான் பார்க்கப்படுகிறார். இவர் 6 போட்டிகளில் 281 ரன்களை விளாசியுள்ளார்.

பாபர் அசார் 301 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு பிறகு அதிக ரன்கள் அதாவது அட்டவணைப்படி 281 எடுத்து பட்டியலில் இரண்டாம் இடத்தை ரிஸ்வான் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்று கலத்தில் இறங்கி வந்தவர் பிரமாதமாக இன்னிங்சை ஆடி  உள்ளார். மேலும் அவரை ஹீரோ என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வர்ணித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இரண்டு நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ப்ளு காய்ச்சல் என்று மருத்துவர்கள் சிகிச்சை சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

ஆனால் நேற்று களத்தில் இறங்கி அவர் 52 பந்துகளில் 67 ரன்கள், 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளை எடுத்துள்ளார். ரிஸ்வான் மேலும் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சோயப் அக்தர் கூறியுள்ளார். ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இதை உங்களால் நம்பமுடிகிறதா? இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மீது இது பெரிய மரியாதை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். போட்டிக்கு முன்பாக ரிஸ்வான் ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் நுரையீரல் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேத்யூ ஹைடன் இதை உறுதி செய்து முஹம்மது ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் ஒரு போராளி. இந்த தொடரில் மிகவும் அறிவு பூர்வமாக விளையாடினார். அவரிடம் ஒரு அசாத்திய தைரியம் உள்ளது என்று அவரைப் பாராட்டி உள்ளார்.

ரிஸ்வானின் இந்த உடல் நிலை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது தைரியமான இன்னிங்ஸ் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேச்சு பொருளாக உள்ளது. ரிஸ்வான் தற்போது பாகிஸ்தானின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.