வடியாத வெள்ளநீர்! முடியாத சோக வாழ்க்கை!

0
141

சென்னையில் பெய்து வந்த தொடர் மழை மெல்ல மெல்ல குறைந்து மேகங்கள் வழிவிட்டு சூரிய வெளிச்சம் தென் பெற்றிருக்கக்கூடிய சூழ்நிலையிலும் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வழியாக சோகங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கொளத்தூரில் ஜவஹர் நகர், சிவ இளங்கோ சாலை, ஜி கே எம் காலனி, பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் இடுப்பு அளவிற்கு தேங்கி நிற்கின்றது இந்த பகுதிகளில் தரைதளத்தில் இருக்கக்கூடிய வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கின்றன.

அதோடு வட சென்னையில் பட்டாளம், ராயபுரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், திருவெற்றியூர், உட்பட ஒரு சில பகுதிகளிலும் சென்ற ஐந்து தினங்களாக தேங்கிய தண்ணீர் வடியாத நிலை காணப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள இந்த மழை நீரின் காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக அங்கே இருக்கக்கூடிய பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் தரைதளத்தில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் சுகாதார வசதிகள் மாநகராட்சி சார்பாக செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தவிர்த்து மழைநீரால் சூழ்ந்து இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்து வரும் சென்னை வாசிகளுக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் உட்பட சுகாதார வசதிகளும் முன்னெடுக்கப்படுகின்றன தேங்கியுள்ள மழை நீரை 539 மோட்டார் மற்றும் ராட்சத பம்பு மூலமாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் இந்த பணிகளில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பு மற்றும் அணுகு சாலைகளிலும் நீர் தேங்கி இருந்தனர் இதனை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள் அவ்வாறு தேங்கி இருக்கக்கூடிய நீரையும் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது.

ஒரு தெருவில் இருக்கக்கூடிய நீரை மற்றொரு தெருவழியாக அகற்றும்போது அந்த தெரு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒரு சில பகுதிகளில் நடைபெற்றது. தண்ணீரை மாற்று வழியாக அகற்றும்போது அந்த தெரு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செயலும் ஒரு சில பகுதிகளில் நடைபெற்றது தண்ணீரை அகற்ற பட்ட வடிந்த ஒரு சில பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது முக்கிய பகுதிகள் சாலைகளில் தேங்கி இருக்கக்கூடிய நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்கிறது.

சென்னை மந்தைவெளி ஆர்கே மடம் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெரிய ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அந்த பள்ளங்களை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள் மழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த நியாயவிலைக்கடை குள்ளும் தண்ணீர் புகுந்தது இதன் காரணமாக அங்கே இருந்த அரிசி பருப்பு உட்பட ஒரு சில பொருட்கள் சேதம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது அதனை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று அகற்றினர் அதை ஒரு சில பகுதிகளில் பார்க்க முடிந்தது.

சென்னை போலவே புறநகர் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது குறிப்பாக கோவிலம்பாக்கம், கரும்பு குளத்தூர், காஞ்சிபுரம், மேற்கு தாம்பரத்தில் இருக்கக்கூடிய வரதராஜபுரம், முடிச்சூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, வேளச்சேரி, ராம் நகர், ஊரப்பாக்கம், மணலி, புது நகர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், உள்ளிட்ட சாலைகளில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் இருப்பதால் அந்த பகுதிகள் நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் இதே துயரத்தைத் தான் எதிர் கொள்கின்றோம் நோய்த்தொற்று பரவுவதற்கு முன்பு தண்ணீரை உடனடியாக அகற்றுவதுடன் எங்களுடைய துயர்துடைக்க தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Previous articleஇன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Next articleகன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!