பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பேருந்தில் பயணம் செய்பவர்கள் பலர் பல இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து தான் வருகின்றனர்.அந்தவகையில் அதற்கெல்லம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பெங்களூரில் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த விசாரணையானது பெங்களூர் மக்களியே தற்பொழுது திரும்பி பார்க்க வைத்துள்ளது.பெங்களூரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

அவற்றில் ஒருவர் பயணத்தின் போது சக பணியாளர்கள் தொலைப்பேசி உபயோகித்து அதிக இடையூறு தருவதாக கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ரிட் மனு அளித்தார்.அந்த மனுவில் அவர் கூறியது,பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது சக பணியாளர்கள் அதிக சத்தம் வைத்து இசை கேட்பதும்,சத்தமாக வீடியோ பார்ப்பதும் , என கூட பயணிக்கும் சக பயணிகளுக்கு தொடர்ந்து இன்னல்களை கொடுத்து வருகின்றனர்.அதனால் சக பயணிகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என இவ்வாறு கூறியிருந்தார்.மேலும் இந்த மனுவானது கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

இந்த விசாரணையின் முடிவில் பேருந்தில் பயணம் செய்யும் போது சக பணியாளர்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில் யாரேனும் தொலைப்பேசியில் அதிகளவு சத்தம் வைத்து வீடியோ பார்ப்பது,அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்பது அதுமட்டுமின்றி அதிகளவு சத்தம் தரக்கூடிய ஸ்பீக்கர் உபயோகிப்பது போன்றவற்றை யாரேனும் செய்தால் அவர்களுக்கு ஓட்டுனர் அறிவுரை கூற வேண்டும்.ஓட்டுனர் அறிவுரையை அவர்கள் ஏற்க மறுத்து சக பயணிகளுக்கு மேலும்  இன்னல்களை அளித்தால் அவர்களை பேருந்தில் இருந்து தாரளமாக இறக்கி விடலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறபித்துள்ளனர்.அதனால் பேருந்தில் பயணம் செய்யும் பெங்களூர் வாசிகள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.மேலும் இந்த உத்தரவானது பெங்களூர் நகரத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.