மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி!

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி!

மாலி நாட்டின் தென்மேற்கு கவுலிகொரோ என்ற பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சோதனை சாவடியின் மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென எதிர்பாராத தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுதப் படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்து உள்ளனர். அரசு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் காயமடைந்த 3 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதேபோன்று ராணுவ வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் பயங்கரவாதிகள் 6 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தனர்.

Leave a Comment