முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை!

Photo of author

By Hasini

முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை!

கன்னட நடிகையான டிம்பிள் குயின் என்று அழைக்கப்படும் நடிகை ரச்சிதா ராம். இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் லவ் யூ ரச்சு. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில்தான் நடித்த காட்சிகள் மற்றும் கதை குறித்து ரசித்தா ராம் விளக்கிக் கூறினார். அப்போது கூட்டத்திலிருந்த நிருபர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த நடிகை சிறிதும் யோசிக்காமல் உங்களது முதல் இரவில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என அவரிடமே கேள்வியை திருப்பி கேட்டார். இதனால் அங்கு கூடி இருந்த நிருபர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து நடிகை ரக்க்ஷிதா இங்கே நிறைய பேர் கல்யாணம் ஆனவங்க இருக்காங்க நான் யாரையும் சங்கடப்படுத்த இவ்வாறு பேசவில்லை. பொதுவாக கல்யாணத்துக்கு பிறகு என்ன செய்றாங்கன்னு சொல்றீங்களோ? என்ன செய்கிறார்களோ? என்று மறைமுகமாக கூறினார்.

ரஞ்சிதாவின் இந்த அதிர்ச்சியான கருத்துக்களை கேட்ட நிருபர்கள் அதிலிருந்து மீண்டு வரும்போது அவர்கள் காதல் செய்வார்கள் இல்லையா? அதுதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து நான் இந்த காட்சிகளில் ஏன் இப்படி நடித்தேன் என்பது உங்களுக்கு படம் பார்க்கும் போது தெரியும் எனவும் அவர் பொறுமையாக கூறினார்.

மேலும் நடிகையின் உடலுறவு தொடர்பான கருத்து அங்கே மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் தேஜஸ்வி நாகலிங்கசாமி, ரச்சிதாவின் இந்த கருத்து மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது.

மாநிலத்தின் புகழையே அவர் கெடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். முதலிரவு குறித்து சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கன்னட கிராந்தி தளம் கூறியுள்ளது. மேலும் இந்த நடிகை நடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம்  கோரிக்கை எழுந்துள்ளது.