தமிழகத்தில் தொடரும் கனமழை! 5667 குளங்கள் நிரம்பின!

0
111

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஏரி மற்றும் பாசன குளங்கள் போன்றவை அனைத்தும் நாளுக்கு நாள் நீர் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றன.

பொதுப்பணித்துறையின் கீழ் நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி ,மதுரை மற்றும் கோயம்புத்தூர், உள்ளிட்ட ஆகிய மண்டலங்கள் இருக்கின்றன. இவற்றின் கட்டுப்பாட்டில் சுமார் 90 நீர் நிலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு இரண்டு லட்சத்து 74, 297 மில்லியன் கன அடி என்று சொல்லப்படுகிறது.

90 நீர்த்தேக்கங்களின் 91.14 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 14 ஆயிரத்து 138 பாசன நிலங்களில், 5666 குளங்கள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன. 3 ஆயிரத்து 206 குளங்கள் 26 முதல் 99 சதவீதமும், 1940 குளங்களில் 53 முதல் 75 சதவீதம் வரையிலும் 1708 குளங்கள் 20 முதல் 50 சதவீதமும் 1360 குளங்கள் 1 முதல் 25% நிரம்பியிருக்கின்றன.

257 குடும்பங்களில் எதிர்பார்த்த அளவு மழை நீர் இன்றி கோடைகாலத்தில் இருப்பதைப் போன்ற வரண்ட தான் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு நீர் ஏன் வரவில்லை நீர்வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டு இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்தால் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் அதிகமாகி மேலும் 3 ஆயிரத்து 206 குளங்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட தகவல்களை பொதுப்பணித் துறையின் நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Previous articleஅம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!
Next articleஉலக நோய் தொற்று பாதிப்பு 25 கோடியை கடந்தது! அதிர்ச்சியில் உலக சுகாதார நிலையம்!