உலக நோய் தொற்று பாதிப்பு 25 கோடியை கடந்தது! அதிர்ச்சியில் உலக சுகாதார நிலையம்!

0
104

உலகம் முழுவதும் நோய்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் நோய்த்தொற்று பரவாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.45 கோடியை தாண்டி இருக்கிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்சமயம் 25 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரத்து 557 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து இதுவரையில் 23 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 671 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.

அதோடு நோய்த்தொற்று பரவலுக்கு இதுவரையில் 51 லட்சத்து 23 ஆயிரத்து 315 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நோய்த் தொற்றுக்கு தற்சமயம் ஒரு கோடியே 81 லட்சத்து 39 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 77 ஆயிரத்து 575 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

நோய்த் தொற்று அதிகமாக பரவிய நாடுகளும், பாதிப்புகளும்.

துருக்கி 84 லட்சத்து 32 ஆயிரத்து 18 பிரான்ஸ் 72 லட்சத்து 90 ஆயிரத்து 886, ஈரான் 60 லட்சத்து 45 ஆயிரத்து 212, அர்ஜென்டினா 53 லட்சத்து 7159 ,ஜெர்மனி 50 லட்சத்து 68 ஆயிரத்து 919,  50 லட்சத்து 56 ஆயிரத்து 954 கொலம்பியா 50 லட்சத்து 34 ஆயிரத்து 266, இத்தாலி 48 லட்சத்து 65 ஆயிரத்து 260 இந்தோனேசியா 42 லட்சத்து 50 ஆயிரத்து 76, மெக்சிகோ 38 லட்சத்து 45 ஆயிரத்து 733.