மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான மத்திய ரயில்வே மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ராவ் சாகிப் அவுரங்காபாத் பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்றார், அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் இல்லாத செயல், எரிபொருள் என்பதை உலக சந்தை விலை நிலவரத்தை தொடர்பு உடையது .இந்த விலை நிலவரம் ஆனது அமெரிக்காவில் தான் முடிவு செய்யப்படுகின்றது. ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு இந்திய அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பது மிகத் தவறு, மத்திய அரசு தீபாவளிக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை வெகுவாக குறைத்தது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்தனர் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எதிர்க் கட்சிகளும் மத்திய அரசு சந்தர்ப்பம் ஏற்படும்போது மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றாமல் இருக்கின்றது என்று குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு சார்பாக தொடர்ந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனை காதில் போட்டுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சுமத்தியவாரே இருந்து வருகின்றன.