141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்!

0
81

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது வள்ளக்கடவு வண்டிபெரியர் ஆற்றின் கரையோரப் பகுதியில் வசித்து வருபவர் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது அணையின் பராமரிப்பு தமிழக அரசிடம் இருக்கிறது தொடர் கனமழையின் காரணமாக, பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 141 கன அடியை எட்டியது.

கேரள மாநிலத்தின் பகுதிகளுக்கு தண்ணீர் வெளியேறும் வள்ளக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, போன்ற பெரியாற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கரையோரப் பகுதிகளில் வசித்து வருபவர் களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கியின் மூலமாக அறிவித்தது. நவம்பர் மாதம் 15ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டிய போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 142 அடியாக உயரும் சமயத்தில் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்திருக்கிறது ஆழியாறு அணை. ஒட்டுமொத்தமாக 120 அடி உயரத்தை கொண்ட இந்த அணை கனமழையின் காரணமாக, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியது உபரி நீர் வீணாகாமல் இருக்க குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு தொடர் மழையின் காரணமாக, 119.80 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது அணையின் பாதுகாப்பு காரணமாக, 11 மதகுகள் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.