அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

0
118

திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அதேபோல எரிவாயு சிலிண்டர் விலையை ஒ100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி நேற்றைய தினம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரையில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பாஜகவின் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு தமிழக அரசை கண்டித்து உரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் நாகராஜன், நகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன், உட்பட அனேக நபர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 26-ஆம் தேதி பாஜக விவசாய அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாட்டு வண்டி பயணம் நடத்தப்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Previous articleநான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு!
Next article20வது நாளாக ஒரே நிலையில் நீதிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!