17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

0
133

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ. 59 வயதான இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் ஆண்ட்ரூ சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டார்.

இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ மீது ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற பெண் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியது இங்கிலாந்தை மட்டுமின்றி உலகையே அதிர வைத்தது. தான் 17 வயதாக இருக்கும்போதே ஆண்ட்ருவுடன் உறவு வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் இரண்டு முறை அவர் தன்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் ஜெப்ரி எப்ஸ்டீனை தான் பார்த்ததே இல்லை என்று கூறிய இளவரசர் ஆண்ட்ரு பின்னர் அவருடன் பழகியது உண்மைதான் என்றும் ஆனால் அவருடன் உறவு எதுவும் வைக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை அடைந்ததோடு ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தது.

இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராணியின் ஒப்புதலுடன் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு அரச குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Previous articleபுதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?
Next articleமுதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி