கூட்டணி கட்சியில் இருந்து யாரேனும் விலகி வந்தால் அவரை மற்ற கட்சிகள் தங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் என்பது இயல்பான ஒன்று, ஆனால் இதற்கு எதிர்மாறாக அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான சோழவந்தான் மாணிக்கம் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், இது அதிமுகவினர் இடம் கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மாணிக்கம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது, அவர் தர்ம யுத்தத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவரிடம் வந்து சேர்ந்த முதல் சட்டசபை உறுப்பினர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. அவரை கட்சியின் வழிகாட்டு குழு உறுப்பினராக பன்னீர்செல்வம் நியமனம் செய்தார், எல்லாவற்றையும் துறந்து விட்டு அவர் தற்சமயம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிமுக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் அவரை வழிகாட்டு குழுவின் நினைத்தது தவறு என்று தெரிவிக்க முடியாமல், அதிமுக விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறது.
கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் கட்சி தன் பக்கம் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதை கண்டிக்க வேண்டாமா? இவரை பின்பற்றி அந்த காட்சியில் இருக்கும் மற்றவர்களும் சென்றால் கட்சி என்னாவது என்று அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருவதாக, சொல்லப்படுகிறது. இருந்தாலும் கட்சித் தலைமையோ எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. எது எப்படி நடந்தாலும் கூட்டணிக்குள் குழப்பம் வந்து விடாமல் இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்