சென்னை அடையாறு பகுதியில் நடந்த தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் 78 லட்சம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், 12வது மெகா தடுப்பூசியும் நடைபெறுகிறது.
இதுவரையில், 77.33 சதவீத நபர்கள் முதல் தவணை தடுப்பு செய்யும் 42% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளார்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு நடைமுறையில் இருக்கிறது. இது மதுபான கூடங்களுக்கும் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும் ஆகவே மதுபானங்கள் வாங்க வருகை தருவோர் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் இதை கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.