பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

0
91
Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!
Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

பொதுவாக பெண்கள் என்றாலே ஒருவரது துணையை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது.  அதிலும் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம். அவருக்கு பணிவிடை செய்ய நான்கு பேர் என்று ஒரு குடும்பமே வேலை செய்து தருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று அதிகாலை திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் அதாவது  வீட்டின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு, அவர் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இப்படி செல்வார்களா என்ற ஆச்சரியம் தான்.

மேலும் அவர் மருத்துவமனைக்கு சென்ற பத்து நிமிடங்களில் எல்லாம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பிரசவ வலியோடு மிதிவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்தது குறித்து அவரே தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இன்று காலை 3 மணி அளவில் எங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றோம் என்றும், பிரசவத்தின்போது மிதி வண்டி ஓட்ட வேண்டும் என்று நான் முன்கூட்டியே எதுவும் திட்டமிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி நடந்து விட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக குழந்தை பிறந்து உள்ளது என்றும், அவரது தந்தையை போலவே உள்ளது என்றும் அவர் மகிழ்ச்சியோடு இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2006 ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய இவர், இதற்கு முன்னர் 2018 ம் ஆண்டு முதல் பிரசவத்தின் போது மோட்டார் சைக்கிளின் மூலம் மருத்துவமனைக்கு சென்று முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.