வடகிழக்கு பருவமழை இந்த இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
114

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கக்கூடிய செய்திக்குறிப்பில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு வங்க கடல் பகுதிகள் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் ஆகவே இந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஅந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
Next articleநாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!