முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

0
129

சென்ற அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே டி ராஜேந்திர பாலாஜி இவருக்கு எதிராக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார், இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் தெரிவித்ததாவது, ரவீந்திரனின் மருமகனுக்கு ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பதவி வாங்கித் தருவதாக தெரிவித்து 30 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அதில் விஜய் நல்லதம்பி முதல் குற்றவாளியாகவும், கே டி ராஜேந்திர பாலாஜி இரண்டாவது குற்றவாளியாகவும், சேர்க்கப்பட்டு உள்ளார் என்று வாதிட்டார்..

அதோடு பலருக்கு வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இதன் மூலம் 3 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. புகார்தாரர் பல அரசியல் கட்சிகளுக்கு தவியவர் விஜய் நல்லதம்பி தான் இந்த மோசடியை செய்திருக்கிறார். ஆனால் அவரை காவல்துறையினர் பாதுகாப்பு வருகின்றன. மனுதாரர்கள் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்கும்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இதன் காரணமாக, அவரை அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கு இந்த வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. அவர் காவல் துறையினரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறார் என்று வாதிட்டார்.

இந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரே குற்றச்சாட்டுக்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யவில்லை ரவீந்திரன் இடம் 30 லட்சம் ரூபாயும், பிறரிடம் பல கோடி ரூபாயும் ராஜேந்திரபாலாஜி மோசடி செய்திருக்கிறார்,இதனை ஒரே குற்றச்சாட்டாக கருதக்கூடாது. இவருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார். ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று பல இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Previous articleதமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!
Next articleதலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!