இந்தியாவிடம் முக்கிய கோரிக்கை வைத்த இலங்கை அரசு! என்ன செய்யவிருக்கிறது இந்தியா?

0
144

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஈழப் போர் சமயத்தில் இலங்கை சிங்கள ராணுவத்தினர் இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

அதன் பிறகு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று இலங்கையின் அதிபரானார் அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து அடுத்தபடியாக வந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டு அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்கள் சற்று அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையில் தற்சமயம் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வின் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் இறங்கி வீதிகளில் திரண்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே குற்றச்சாட்டை கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக முன்வைத்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்களின் சகோதரரும் அந்த நாட்டின் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சே அவசரமாக டெல்லி வந்து காத்திருந்து இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை சந்தித்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் பஸில் ராஜபக்சே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்று சொல்லப்படுகிறது இலங்கையின் கருவூல செயலர் எஸ் ஆர் ஆட்டிகல இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் பல உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கொழும்பு துறைமுக முனையத்தை மேம்பாடு செய்வதற்காக இந்தியா மற்றும் ஜப்பானில் உடன் செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஒருதலைபட்சமாக ரத்து செய்தது. சீனாவின் அழுத்தமே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் மிகப்பெரிய இடைவெளி உண்டானது, இந்த ஒப்பந்த முடிவின் காரணமாக, இலங்கைக்கு பெரிய பொருளாதார பின்னடைவு உண்டானது.

இதற்கிடையே நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது இதன் காரணமாக, உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப இயலாமல் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலை மிகக் கடுமையாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உணவு பொருட்களின் விலை உயர்வு பால், மாம்பழம் சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உண்டாகி இருக்கிறது. இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 7.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக உலக வங்கி கூறியிருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தான் இந்தியாவிடம் உதவி கேட்டு டெல்லிக்கு வந்திருக்கிறார் பசில் ராஜபக்சே இந்தியாவின் நிதி துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இடம் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப் படுத்தும் விதத்தில் உதவிகளை கேட்டிருக்கிறார் அவர்.

இலங்கை அரசு 1.1 பில்லியன் டாலர் நாணயம் பரிமாற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்து இருப்பதாகவும், இலங்கையின் கோரிக்கையை ஏற்கும் என்பதை டெல்லி இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கையின் இந்த சூழ்நிலையை மத்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டால் பல காலமாக இலங்கை வசமிருக்கும் இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஜப்பான் உடன் இலங்கை செய்த ஒப்பந்தத்தை முறித்து இருப்பதால் இந்திய அரசு இலங்கை மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. சூழ்நிலை இவ்வாறு இருக்க மத்திய அரசு எவ்வாறான முடிவை எடுக்கும் என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஆனால் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவது தான் உத்தமம் என்கிறார்கள் சர்வதேச அரசியல்வாதிகள்.

Previous articleநகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!
Next article3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!