அதிமுகவின் உண்மையான ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் அதிரடி!

0
189

சேலத்தில் நடந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரையின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதைத்தான் பொதுக்குழு ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் தான் தற்சமயம் அதிமுகவில் வழி நடத்தி வருகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் கிளைக் கழக தேர்தல் நடப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு அதிகாரப்பூர்வமாக இருக்கிறது. யாரோ ஒரு சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள், பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்துகிறார்கள், என்பதால் அவர்கள் தலைவராக வந்துவிட முடியாது. கட்சிக்கொடி பயன்படுத்துவதால் அவர்கள் சட்டரீதியாக விஷயம் அதற்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது. ஊடகங்கள் மட்டுமே பெரிதாக எழுதியும், செய்திகள் ஒளிபரப்பியும், வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அன்வர் ராஜாவின் நீக்கம் கட்சிக்குள் ஒரு தாக்கத்தையும் உண்டாக்காது, மிகப்பெரிய எழுச்சியும், புத்துணர்ச்சியும், தற்சமயம் அதிமுகவில் இருக்கிறது. உண்மையான அதிமுகவின் ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

Previous articleஎதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!
Next articleவினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here