முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து நாளையுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க அதிமுக மேலிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் வரை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தலைமை கழகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தலைமையில் நாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்டோர் பங்கேற்று கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
மாவட்ட கழக அமைப்புகளிலும், ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அதனை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து எல்லா மாவட்டங்களிலும் ஏழை ,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.