முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

0
148

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சால் அந்த அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது

தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 29 ரன்களை எடுத்திருந்தபோதிலும் அதன்பின் களமிறங்கிய ஐந்து பேட்ஸ்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர் என்பதும் இவர்களில் மூவர் டக் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஓரளவு நிலைத்து ஆடி தலா 24 மற்றும் 19 ரன்களை எடுத்ததால் வங்கதேச அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது. மயாங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட் ஆனார். தற்போது ரோஹித் சர்மா மற்றும் புஜாரே பேட்டிங் செய்து வருகின்றனர்.

Previous articleதிமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?
Next articleமக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்