பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா?
வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் தற்பொழுது போன் பே மற்றும் ஜீ பே ஆன்லைன் பரிவர்த்தனை வந்துவிட்டது. இந்தியா டிஜிட்டல் முறையில் தொடர்ந்து மாறி வருகிறது.
அந்த வகையில் அனைத்து வங்கிகளுக்கும் கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டாக் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது என்னவென்றால், மக்கள் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் வணிகம் பற்றி வங்கிகளின் பார்வை தவறாக உள்ளது. யுபிஐ மூலம் செலுத்தும் முறையில் கூகுள் பே மற்றும் போன் பே விற்கு வங்கிகள் அதிக முன்னுரிமை வழங்கி விட்டது. அதனால் நாளடைவில் அதன் ஆதிக்கம் அதிகமாக கூடும். வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இந்த இரு நிறுவனங்களும் பணம் செலுத்தும் வணிகத்தில் 85 விழுக்காடு தற்போது கொண்டுள்ளது என்றும் கூறினார்.
இதனை அலட்சியப்படுத்தி வந்தாள் அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இதை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் விற்பனை அடிப்படையிலான அணுகுமுறைக்கு பதில் வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறையை கையாள வேண்டும் என்று கோட்டக் மகேந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டா கேட்டுக்கொண்டார். இவ்வாறு இவர் கூறியதால் இதன் எச்சரிக்கை வங்கிகளின் பக்கம் திரும்பும். போன்பே மற்றும் ஜிபே உபயோகிப்பதற்கு தடை விதிக்கக் கூட நேரிடும் என்று கூறுகின்றனர். இதற்கு மாற்றாக வேறு ஒரு முறையை வங்கிகள் செயல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.