3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாத வருமானம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் போலவே கூலித் தொழிலாளிகளும் பெருமளவு பாதிப்படைந்தனர். தொற்று பாதிப்பு முடிந்து அரசாங்கம் தளர்வுகளை வெளியிட்டது. இந்த தளர்வுகளில் பொதுமக்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர்.
இந்த விவரத்தை தற்பொழுது ரிசர்வ் வங்கி புள்ளி விவரமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மக்கள் தொற்று காலத்தில் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர் என்பதை இந்த புள்ளி விவரம் வெளிப்படுத்துகிறது. அதனின் பின்னடைவுதான் அக்டோபர் மாதம் மட்டும் கிரெடிட் கார்ட் மூலம் ஒரு லட்சத்து 900 ஆயிரத்து 43 கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் வர்த்தகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தற்போது அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளது. ஊரடங்கு போடப்பட்ட போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய மக்கள் இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிரெடிட் கார்டை உபயோகம் செய்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி குவித்துள்ளனர் என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமின்றி அக்டோபர் மாதத்தை அடுத்து தீபாவளி பண்டிகை வந்த வகையில் ஆடைகள் ,பொருட்கள் போன்றவை கிரெடிட் கார்டு மூலம் மக்கள் வாங்கி குவித்துள்ளனர். அதனால் கிரெடிட் கார்டின் வர்த்தகம் என்ற அளவும் இல்லாத பெரும் உச்சத்தை தொட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல அக்டோபர் மாதத்தில் மட்டும் 13 லட்சத்திற்கும் மேல் மக்கள் புதிய கிரெடிட் கார்டு வாங்கி இருக்கின்றனர். அதற்கு முந்தின மாதம் செப்டம்பரில் 10 லட்சம் மட்டுமே நாட்டின் மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை இருந்தது.
தற்பொழுது 6 கோடியே 63 லட்சம் ஆக மாறி உள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த மூன்று மாதத்திற்கு உள்ளேயே இத்தனை கோடி கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு கொரோனா ஊரடங்கு பெரிய காரணம் என்று கூறுகின்றனர்.கொரோனா அலையின் பிந்தைய காலம் தான் இவ்வளவு அதிகமான கிரிடிட்கார்டு சேவையின் பரிவர்த்தனை உச்சத்தை தொட்டது என கூறுகின்றனர்.