கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பகுதியில் தற்சமயம் ஒரு மசூதி உள்ளதாகவும் அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க இருப்பதாகவும் 4 வலதுசாரிகள் அமைப்பு தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.
அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேசவதேவ் கோவிலும் உள்ளதால் அந்த பகுதியில் அதிக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வலதுசாரி அமைப்புகளான அகில பாரத இந்து மகாசபா கிருஷ்ண ஜென்மபூமி, நியாஸ் நாராயணி சேனா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி தளம் உள்ளிட்ட நான்கு அமைப்புகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிற கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதியில் தற்சமயம் ஒரு மசூதி இருக்கிறது. ஆனாலும் அங்கே சிலையை வைப்போம் என்று அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களுடைய மனுவை நிராகரித்து இருக்கின்ற மாவட்ட நீதிபதி அமைதியை சீர்குலைக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று கூறினார். டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதாவது நாளை தினம் பாபர் மசூதி இடிப்பு தினத்தை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணிக்காக மதுரா நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் அந்த பகுதி இருக்கிறது என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில், தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதே போன்று பல வருடங்களுக்கு முன்னர் ராமர் பிறப்பிடமாகக் கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த மசூதியை இடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்று சொல்லப்பட்டது. அதோடு ராமர் கோவில் கட்டுவதில் உத்தரப் பிரதேச மாநில பாஜக மிகத் தீவிரமாக இருந்தது இதன்படி சமீபத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தற்சமயம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகாலமாக இருந்த இந்த பாபர் மசூதி இடிப்பு சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்சமயம் மதுரா நகரின் கிருஷ்ணர் பிறப்பிடமாக கருதப்படும் பகுதியில் இருக்கின்ற மற்றொரு மசூதியை இடித்து விட்டு அங்கே கிருஷ்ணர் சிலையை வைப்போம் என்று தெரிவிக்கப்பட்ட இருப்பது மீண்டுமொரு சர்ச்சை கிளம்ப இருக்கிறது என்று சொல்கிறார்கள்.