நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்! பிரதமர் நரேந்திரமோடி வரவேற்கிறார்!

Photo of author

By Sakthi

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிற்பகலில் வெள்ளி வருகிறார் விமான நிலையத்திலிருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் அங்கே அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளதாக தெரிகிறது.

அதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் இதில் இரு நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்டோரின் இடையே நேருக்கு நேர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜெய் அவர்களும், சந்திக்க இருக்கிறார்கள். அதேபோல இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் ரஷ்ய ராணுவ அமைச்சர் செர் ஜெய் குவும் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

அதன் பிறகு இந்த நான்கு அமைச்சர்களும் பங்குபெறும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது இந்த சந்திப்புகளின் பரஸ்பர பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இரண்டு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.